வல்லக்கோட்டை முருகன் கோவிலில் திருக்கல்யாண உத்சவம் விமரிசை
ADDED :23 hours ago
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில், திருக்கல்யாண உத்சவம் வெகு விமரிசையாக நேற்று நடந்தது. ஒரகடம் அடுத்த, வல்லக்கோட்டை வள்ளி தெய்வானை சமேத முருகன் கோவில் உள்ளது. திருக்கல்யாண உத்சவம் நேற்று நடந்தது. இந்த உத்சவத்தை முன்னிட்டு நேற்று காலை, உற்சவருக்கு பல்வேறு விதமான வாசனை திரவியங்களால், சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதையடுத்து, திருமணக்கோலத்தில், வள்ளி தெய்வானை சமேத முருகன் மயில் மண்டபத்திற்கு எழுந்தருளினார். சந்திரசேகர குருக்களின் தலைமையில், உற்சவருக்கு மாங்கல்யம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. தம்பதி சமேதராய் முருகன் கோவிலை மூன்று முறை வலம் வந்தார்.