சீனுவாச பெருமாளுக்கு திருக்கல்யாணம்
ADDED :11 hours ago
கடலுார்: திருவந்திபுரம் கிடாம்பி ஆச்சான் கோவிலில் சீனுவாச பெருமாளுக்கு திருக்கல்யாணம் நடந்தது.
கடலுார், திருவந்திபுரம் கிடாம்பி ஆச்சான் கோவிலில் திருப்பிரதிஷ்டை நாள் உற்சவம் நேற்று முன்தினம் துவங்கியது. நேற்று காலை ஸ்ரீதேவி, பூமாதேவி சமேத சீனிவாச பெருமாளுக்கு திருக்கல்யாணம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர் .
வரும் 25ம் தேதி வரை நடக்கும் திருப்பிரதிஷ்டை உற்சவத்தில் தினமும் காலை 8:00 மணி முதல் 11:00 மணி வரையிலும், மதியம் 3:00 மணி முதல், இரவு 7:00 மணி வரையிலும் வேத பாராயணம், திவ்யபிரபந்த சேவை சாற்றுமறை நடக்கிறது. 25ம் தேதி காலை 10:00 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடக்கிறது.