உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாடலீஸ்வரர் கோவிலில் பந்தக்கால் முகூர்த்தம்

பாடலீஸ்வரர் கோவிலில் பந்தக்கால் முகூர்த்தம்

கடலுார்: பாடலீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பந்தக்கால் முகூர்த்தம் நேற்று நடந்தது.


கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் வரும் மார்ச் 25ம் தேதி கும்பாபி ஷேகம் நடக்கிறது. கும்பாபிஷேக ஏற்பாடு களை முன்னிட்டு பந்தக் கால் முகூர்த்தம் நேற்று நடந்தது. இதனையொட்டி பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. தல விநாயகர் சன்னதியில் சங்கல்பம் செய்து, தீபாராதனை நடந்தது.


தொடர்ந்து, பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்மன், பிடாரி அம்மன் சன்னதிகளில் யாக சாலை பூஜை நடைபெறும் இடத்தில் விநாயகர் வழிபாடு, கலச பூஜை, பந்தக்காலுக்கு பூஜை செய்து, பந்தக்கால் நடப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !