கங்கா சாகரில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வழிபாடு
ADDED :4 hours ago
மேற்கு வங்கம்: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மேற்கு வங்கம் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள கங்காசாகரில் இன்று ஏப்ரல் 27ல் வழிபாடு நடத்தினார். புனித சங்கம தளத்தில் அமித் ஷா பூஜை செய்து கங்கை தாயின் ஆசீர்வாதம் பெற்றார். முன்னதாக மேற்கு வங்கம் வந்த உள்துறை அமைச்சருக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. இது குறித்து உள்துறை அமைச்சர் கூறியதாவது: கங்கை அன்னை கடலோடு சங்கமிக்கும் அந்தப் புனித பூமியான, கங்கா சாகர் எனும் புண்ணியத் தலத்தில் வழிபாடும் ஆராதனையும் செய்யும் பெரும் பேறு எனக்குக் கிட்டியுள்ளது. கங்காசாகர் போன்ற புனிதத் தலத்திற்கு வந்தது மிகுந்த அமைதியையும், ஆன்மீக மகிழ்ச்சியையும் அளிக்கிறது. இ்வ்வாறு அவர் தெரிவித்தார்.