உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் பங்கேற்பு

காளியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் பங்கேற்பு

கோத்தகிரி: கோத்தகிரி அருகே அமைந்துள்ள திம்பட்டி எட்டூர் உச்சகாளியம்மன் கோவிலில், மகா கு ம்பாபிஷேகம் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு, 20ம் தேதி காலை, 9:00 மணிக்கு, மகா கணபதி ஹோமம், மாலை, 4:30 மணிக்கு, பஞ்சகவ்யம், வாஸ்து சாந்தி, அங்குரார்பணம் மற்றும் கும்பாஸ்தாபனம் முதல் கால பூஜை நடந்தது.


21ம் தேதி, காலை, 10:30 மணிக்கு, இரண்டாம் கால பூஜையுடன், வேத பாராயணம், பிரசாத வழங்குதல், அம்பாள் மற்றும் பரிவாரங்கள் பிரதிஷ்டை நடந்தது.மாலை, 4:30 மணிக்கு மேல் மூன்றாம் கால பூஜையுடன், வேத பாராயணம் பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடந்தது.


முக்கிய திருவிழா நாளான நேற்று, அதிகாலை, 4:00 மணி முதல் நான்காம் கால வேள்வியுடன், வேதிக்கரைச்சனை, மண்டபார்ச்சனை, பிராணப் பிரதிஷ்டை, யாத்ரா தனம் களம் புறப்பாடு பூஜையை தொடர்ந்து, மகா கும்பாபிஷேகம் தீபாராதனை நடந்தது. விழாவில், காலை, 10:00 மணி முதல் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !