உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் /  சேத்தியாத்தோப்பு பாலமுருகன் கோவில் காவடி திருவிழா

 சேத்தியாத்தோப்பு பாலமுருகன் கோவில் காவடி திருவிழா

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த விளக்கப்பாடி கிராமத்தில் பாலமுருகன் கோவில் சித்திரை காவடி திருவிழா நடந்தது.


கடந்த 16ம் தேதி மாலை 7:00 மணிக்கு காப்பு கட்டுதல், விழா கொடியேற்றம் நடந்தது. அன்றிரவு உற்சவர் வீதியுலாவும், மறுநாள் காலை 7:00 மணிக்கு சிறப்பு அபிேஷகம், மகா தீபாராதனை நடந்தது. அதனை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு சிறப்பு அலங்காரத்துடன் சாமி வீதியுலா, முருகன் பிறப்பு வளர்ப்பு கதை படித்தல் உள்ளிட்ட உற்சவம் நடந்தது. நேற்று பகல் 12:00 மணியளவில் காப்பு கட்டிக்கொண்ட பக்தர்கள் மேலக்குளக்கரைக்கு சென்று காவடி அலங்காரம், வேப்பிலை கரகம் சோடிக்கப்பட்டது. அரிகண்ட காவடி, செடல் காவடி, பால் காவடி, பன்னீர் காவடியுடன் குளக்கரையிலிருந்து பக்தர்கள் புறப்பட்டு, பால்குடம் புறப்பாடுடன் மேளதாளத்துடன் கோவிலை வந்தடைந்தனர். பால்குடத்தினை கொண்டு மூலவருக்கு சிறப்பு அபிேஷகம் மகா தீபாராதனை நடந்தது. கிராம மக்கள் மா விளக்கிட்டு வழிபாடு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !