உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

ஸ்ரீமுஷ்ணம்: பூவராகசுவாமி கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றம் நேற்று காலை நடந்தது.


ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோவில் சித்திரை திருவிழா ஆண்டு தோறும் வெகு விமரிசையாக நடக் கும். இந்த ஆண்டு சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக நேற்று முன்தினம் மிருத்சங்கிரகனம், அங்குரார்ப்பணம் விஷ்வக்சேனர் வீதி புறப்பாடு நடந்தது. தொடர்ந்து நேற்று காலை மூலவர் பெருமாள் அம்புஜவல்லி தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம், அர்ச்சனைகள் நடந்தது. பின்னர் கொடியேற்றம் நடந்தது. பத்து நாட்கள் நடக்கும் சித்திரை விழாவில் முக்கிய நிகழ்வாக நாளை இரவு தங்க கருட வாகனத்தில் சுவாமி வீதியுலா நடக்கிறது. வரும், 29ந்தேதி காலை தேர்திருவிழாவும், மே, 1 ம் தேதி, மதியம் மட்டையடி உற்சவமும் இரவு நித்திய புஷ்கரணி திருக்குளத்தில் தெப்பல் உற்சவமும் நடக்கிறது. தொடர்ந்து 2ம் தேதி இரவு கொடியிறக்கம் நடக்கிறது. ௩ம் தேதி முதல் ௮ம் தேதி வரை விடையாற்றி உற்சவம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !