உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேட்டுப்பாளையத்தில் சத்ய சாய் பாபா ஆராதனை மகோத்சவம்

மேட்டுப்பாளையத்தில் சத்ய சாய் பாபா ஆராதனை மகோத்சவம்

மேட்டுப்பாளையம்: ஸ்ரீ சத்யசாய் பாபாவின் நினைவு தினம், அன்னபூரணிப்பேட்டை சமீதியில் ஆராதனை தினமாக இன்று கொண்டாடப்பட்டது.


கோவை மாவட்டத்தில் மாவட்ட ஸ்ரீ சத்யசாய் நிறுவனங்கள் சார்பில், அனைத்து சமிதிகளிலும், இன்று 24ம் தேதி இந்த மகோத்சவ நிகழ்ச்சி நடைபெற்றது. மேட்டுப்பாளையத்தில் இரு சம்மீதிகளின் சார்பாக அன்னபூரணிப்பேட்டை சமீதியில் இன்று நடைபெற்றது. விழாவை முன்னிட்டு நடைபெற்ற நாராயண சேவையில் குழந்தைகள் முதல் பெரியவர் வரை ஏராளமானோர் பங்கேற்று வழிபட்டனர். தொடர்ந்து பஜனை, ஆரத்தி முடிந்து அன்னதானம் வழங்கப்பட்டது. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !