உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தருமபுரம் ஆதீனத்திற்கு கடலூர் தனியார் மருத்துவமனையில் ஆஞ்சியோ சிகிச்சை

தருமபுரம் ஆதீனத்திற்கு கடலூர் தனியார் மருத்துவமனையில் ஆஞ்சியோ சிகிச்சை

மயிலாடுதுறை: மயிலாடுதுறை தருமபுரத்தில் குருஞான சம்பந்தரால் 16ஆம் நூற்றாண்டில் தோற்றுவிக்கப்பட்ட சைவ ஆதீனங்களில் முதன்மையான தருமபுரம் ஆதீனம் அமைந்துள்ளது. தருமபுரம் ஆதீனத்தில் 27-வது குருமஹா சன்னிதானமாக ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் அருளாட்சி செய்து வருகிறார். நேற்று முன்தினம் சீர்காழி சட்டை நாதர் கோவிலில் நடந்த திருமுலைப்பால் விழாவில் கலந்துகொண்ட பின்னர் குருமகா சன்னிதானத்திற்கு உடல்நல குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து நேற்று கடலூர் சுரேந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குருமஹா சன்னிதானத்தை டாக்டர் அருண் பிரசாத் பரிசோதனை செய்தபோது இருதய ரத்தக்குழாய் அடைப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சைக்கு பின்னர் தற்போது தருமபுரம் ஆதீனம் குரு மகா சன்னிதானம் நலமுடன் உள்ளார்கள் என தருமபுரம் ஆதீனம் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !