உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிறிஸ்தவர்களின் தவக்காலம் துவங்கியது

கிறிஸ்தவர்களின் தவக்காலம் துவங்கியது

பெரியகுளம்: பெரியகுளத்தில் புனித பத்திரீசியார் அமல அன்னை ஆலயத்தில் தவக்காலம் சிறப்பு திருப்பலி பூஜை நடந்தது.

கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் சாம்பல் புதன் இன்று (மார்ச் 2 )ல் துவங்குகிறது. நேற்று மாலை தேவாலயத்தில் பாதிரியார் பாபுராஜ் தலைமையில் இதற்கான பணிகள் துவங்கியது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறைந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடி மகிழ்கின்றனர். ஈஸ்டர் விழாவுக்கு முந்தைய நாற்பது நாட்களை (இன்று மார்ச் 2 முதல்) கிறிஸ்தவர்கள் தவக்காலம் அனுஷ்டிக்கின்றனர். இந்த விரத நாட்களில் சைவ உணவுகளை சாப்பிட்டும்,ஆடம்பர நிகழ்ச்சிகளை தவிர்த்து விடுவர். ஏசுவின் சிலுவைப் பாடுகளை நினைவு கூறும் வண்ணம் வெள்ளிக்கிழமைதோறும் தேவாலயங்கள் சிலுவை பாதை வழிபாடு நடைபெறும். இந்த ஆண்டு ஈஸ்டர் பெருவிழா ஏப்ரல் 17 ல் கொண்டாடப்படுகிறது. என கிறிஸ்தவர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !