மாசி அமாவாசை: கருப்பண்ணசாமி கோயிலில் வழிபாடு
ADDED :1353 days ago
பெரியகுளம்: பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயிலில் மாசி அமாவாசை முன்னிட்டு, கோயில் அருகே வராக நதியில் ஆண் பெண் மருதமரம் நடுவே பக்தர்கள் குளித்து தங்கள் முன்னோர்களுக்கு வழிபாடு செய்தனர். விச்சு கருப்பண்ணசாமி, சச்சு மடை பாண்டி முனீஸ்வரர் கோவில், மேல்மங்கலம் முத்தையா கோவில் உட்பட பல்வேறு கோயில்களில் அமாவாசை சிறப்பு வழிபாடு நடந்தது.