உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் சிவராத்திரி விழா

திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் சிவராத்திரி விழா

திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் சிவராத்திரி விழா மூலவருக்கு நான்கு கால பூஜைகளுடன் நடந்தது.

இக்கோயிலில் பிரதான மூலவரான திருத்தளிநாதருக்கு சிவராத்திரியன்று இரவு 8:30 மணிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனைகள் நடந்து வெள்ளி சர்ப்ப அலங்காரத்தில் அருள்பாலித்தார். பின்னர் இரவு 11:30 மணிக்கு 2 ம் கால பூஜை நடந்து முடிந்து பச்சை பட்டுடுத்தி சந்தனக்காப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். பின்னர் இரவு 12:00 மணி அளவில் அகத்தீஸ்வரருக்கு வில்வ இலைகளால் பக்தர்கள் வழிபட்டனர். தொடர்ந்து அதிகாலை 2:30 மணி, 5:30 மணிக்கு பூஜைகள் நடைபெற்றன. சிவனடியார்களுக்கு அன்னதானத்துடன் விழா நிறைவடைந்தது. ஆதித் திருத்தளிநாதர் கோயிலில் நடந்த சிவாராத்தில் 4 கால பூஜைகளில் திரளாக பக்தர்கள் பங்கேற்றனர். புதுப்பட்டி அகத்தீஸ்வரர் கோயிலில் பக்தர்கள் பால்குடம் எடுத்து அருள் நீராட்டு, யாக வேள்வியுடன் நடந்தது. கல்லாகுழித் தெரு நல்லதங்காள் கோயிலில் சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !