உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருநள்ளாறு கோவிலில் சிவராத்திரியை முன்னிட்டு நாட்டியாஞ்சலி

திருநள்ளாறு கோவிலில் சிவராத்திரியை முன்னிட்டு நாட்டியாஞ்சலி

காரைக்கால்: காரைக்கால் திருநள்ளாறு சனிஸ்வரபகவான் கோவிலில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு நாட்டியாஞ்சலி நடைபெற்றது.

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்ட புகழ்பெற்ற திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோவில் சனிஸ்வரபகவான் அருள்பலித்து வருகிறார்.இக்கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு 17ம் ஆண்டு நாட்டியாஞ்சலி கடந்த 25ம் தேதி துவக்கியது. ஐந்து நாட்கள் நடைபெற்ற நாட்டியாஞ்சலியில் பல்வேறு பகுதியை சேர்ந்து பாரத நாட்டிய கலைஞர்கள் கலந்துகொண்டு தங்கள் திரமைகளை வெளிப்படுத்தினர்.நேற்று முன்தினம் மஹா சிவராத்திரியை முன்னிட்டு தமிழகம் மற்றும் சென்னை,திருச்சி,மைசூர், மும்பை பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட நாட்டிய கலைஞர்கள் பங்கேற்றனர். ஒவ்வொரு குழுவிற்கும் 20நிமிடம் ஒதுக்கப்பட்டது. மேலும் பாரத நாட்டியத்தில் முக்கிய நடனமான வலசி,புஷ்பாஞ்சலி,ஆடும் அழகர் உள்ளிட்ட பல்வேறு நடனங்களை ஆடி பரத நாட்டியர்கள் பார்வைகளை அசத்தினர். இதில் சிறப்பாக நடனம் அடிய கலைஞர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !