நம்மை காப்பாற்றும் நன்மை
ADDED :1344 days ago
இந்த உலகில் எந்தவொரு பொருளையும் எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். நல்ல செயல்களுக்கு ஒரு பொருளை பயன்படுத்தினால் அந்த பொருளின் மதிப்பே உயர்ந்துவிடும்.
நாயகம் புத்தாடை அணிந்தால், ‘‘இறைவா! இதை நீயே எனக்கு கொடுத்தாய்! இதன் மூலம் நன்மையை மட்டுமே அனுபவிக்க வேண்டும்’’ என சொல்வார்.
ஆடையானாலும் சரி வேறு எந்தவொரு பொருளாக இருந்தாலும் சரி, அதை நன்மைக்காக பயன்படுத்த வேண்டும். அப்படி செய்தாலே அது நம்மை காப்பாற்றும்.