மதவக்குறிச்சி திருவாழிப்போற்றி கோயிலில் மண்டல பூஜை
ADDED :4933 days ago
திருநெல்வேலி:மதவக்குறிச்சி திருவாழிப்போற்றி கோயிலில் மண்டல பூஜை நடந்தது.மானூர் அருகேயுள்ள மதவக்குறிச்சியில் திருவாழிப்போற்றி,கோட்டை வீரன் கோயில் கடந்த மாதம் 25ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. இதைத்தொடர்ந்து சுவாமிக்கு தினமும் பூஜைகள் நடந்தன. நேற்று கோயிலில் மண்டல பூஜை நடந்தது. இதை முன்னிட்டு காலை 9 மணிக்கு திருவாழிப்போற்றி, கோட்டை வீரனுக்கு மஞ்சள்பொடி, திரவியம், பால், தயிர் மற்றும் சந்தன அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன. பூஜை ஏற்பாடுகளை செல்லப்பா பட்டர் செய்தார்.சுவாமி முன்பு பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.ஏற்பாடுகளை மதவக்குறிச்சி சாமிநாத பிள்ளை, மரகதலட்சுமியம்மாள் குடும்பத்தினர் செய்தனர்.