உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நெல்லை டவுன் சுடலைமாடசுவாமி கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்

நெல்லை டவுன் சுடலைமாடசுவாமி கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்

திருநெல்வேலி: நெல்லை டவுன் சுடலைமாட சுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.நெல்லை டவுன் அம்மன் சன்னதி தெருவில் உள்ள சுடலைமாட சுவாமி கோயில் கும்பாபிஷேகம் கடந்த 13ம் தேதி காலை நவக்கிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமம், கோபூஜையுடன் துவங்கியது. மாலையில் கும்ப அலங்காரம், முதல்கால யாக சாலை பூஜை, வேள்வி, திரவ்யாகுதியும், இரவு பூர்ணாகுதி மற்றும் தீபாராதனை நடந்தது.நேற்று முன்தினம் காலை கோகுல கும்ப பூஜை, இரண்டாம் கால யாக சாலை பூஜை, திரவ்யாஹூதி, பூர்ணாகுதியும், 11 மணிக்கு சுடலைமாட சுவாமிக்கு யந்திர ஸ்தாபனமும், மாலை 6 மணிக்கு விசேஷ சந்தி, பூதசுத்தியும், இரவு 7.30மணிக்கு மூன்றாம் கால யாக சாலை பூஜை, வேள்வி, பூர்ணாகுதி மற்றும் தீபாராதனை நடந்தது. நேற்று காலை ஹோம கும்ப பூஜை, சுடலை மாடசுவாமிக்கு காப்புகட்டுதல், ஸ்பர்சாஹூதி மற்றும் நான்காம் கால யாக சாலை பூஜை வேள்வி நடந்தது.காலை 6.40 மணிக்கு சுடலை மாடசுவாமிக்கும், மூலாலய விமானத்திற்கும் மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதனையடுத்து சுடலைமாட சுவாமிக்கு மகா அபிஷேகம், சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.11 மணிக்கு மகேஷ்வரபூஜை மற்றும் அன்னதானம் நடந்தது.விழாவில் நகரின் முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை செல்லையா, சுப்பிரமணியன், சேதுராமலிங்கம், பரமசிவம் மற்றும் விழாகமிட்டியினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !