உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வடபழநி ஆண்டவர் கோவிலில் பக்தர்களுக்கு சிறப்பு வசதிகள்

வடபழநி ஆண்டவர் கோவிலில் பக்தர்களுக்கு சிறப்பு வசதிகள்

சென்னை : கோடையை, முன்னிட்டு வடபழநி ஆண்டவர் கோவிலில், பக்தர்களுக்கு நீர்மோர் வினியோகம், பிரகாரத்தில் வெயில் சூட்டை தணிக்க, வெள்ளை சிமென்ட் பூசப்பட்டு சிறப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கோடை காலத்தில் கோவில்களுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை, கோவில் நிர்வாகத்தினர் ஏற்படுத்த அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவுரை வழங்கினார். இதையடுத்து, வடபழநி ஆண்டவர் கோவிலில், கோடையை முன்னிட்டு, கோவில்களுக்கு வருகைதரும் பக்தர்களுக்கு கோவில் பிரகாரங்களில், சூரிய வெப்பத்தை தவிர்க்க, பக்தர்கள் நடந்தும் வரும் இடங்களில், குளிர்ச்சி தரும் வகையில் வெள்ளை நிற சிமென்ட் பூசுப்பட்டுள்ளது. மேலும், பக்தர்கள் வசதிக்காக ஆங்காங்கே தற்காலிக நிழற்பந்தல் அமைக்கப்பட்டது. தரிசனம் முடித்து திரும்புபவர்களுக்கு தண்ணீர், நீர் மோர் மற்றும் எலுமிச்சை சாறு கலந்த பானகம் ஆகியவை வினியோகிக்கப்படுகிறது. கோவில் நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை, பக்தர்கள் வரவேற்று உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !