உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் பங்குனிப் பெருவிழா துவங்கியது

மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் பங்குனிப் பெருவிழா துவங்கியது

சென்னை : சென்னையில் உள்ள மயிலாப்பூர் கற்பகாம்பாள் உடனாய கபாலீசுவரர் கோயிலில் பங்குனிப் பெருவிழா மற்றும் விடையாற்றி கலைவிழா நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

விழாவின் தொடக்கமாக மாசி  24  மார்ச்  8 அன்று செவ்வாய்  கிழமை பகல் விழாவாக அருள்மிகு கோலவிழி அம்மன் சிறப்பு வழிபாடு, இரவு விநாயகர் உற்சவம், மாசி  25  மார்ச்  9 அன்று புதன் கிழமை பகல் விழாவாக கொடியேற்றம் நடைபெற்றது. இரவு அம்மை மயில் வடிவம் சிவபூஜை காட்சி, மாசி  26  மார்ச்  10 அன்று வியாழக் கிழமை பகல் விழாவாக வெள்ளி சூரிய வட்டம், இரவு வெள்ளி சந்திர வட்டம், கிளி, அன்னவாகனங்கள், மாசி  27  மார்ச்  11 அன்று வெள்ளி கிழமை பகல் விழாவாக அதிகார நந்தி காட்சி நிகழ்ச்சியும், இரவு  பூதன், பூதகி, தாரகாசுர வாகனங்கள், மாசி  28  மார்ச்  12  சனிக் கிழமை பகல் விழாவாக வெள்ளி புருஷா மிருகம், சிங்கம், புலி, வாகனங்கள், இரவு நாகம், காமதேனு, ஆடு வாகனங்கள், மாசி  29  மார்ச்  13 ஞாயிற்று கிழமை பகல் விழாவாக சவுடல் விமானம், இரவு வெள்ளி ரிஷப வாகன காட்சியும், மாசி  30  மார்ச்  14 திங்கள் கிழமை பகல் விழாவாக பல்லாக்குவிழா, இரவு ஐந்திருமேனி யானை வாகனங்கள், பங்குனி 1 மார்ச்  15 செவ்வாய் கிழமை பகல் விழாவாக திருத்தேர் வடம் பிடித்தல், இரவு தேரிலிருந்து இறைவன் திருக்கோயிலுக்கு எழுந்தருளல், பங்குனி 2 மார்ச்  16 புதன் கிழமை பகல் விழாவாக வெள்ளி விமானத்தில் இறைவன் அறுபத்து மூன்று  நாயன்மார்களோடு திருக்காட்சி, இரவு சந்திரசேகரர் பார்வேட்டை விழா,  பங்குனி 3 மார்ச்  17 வியாழன் கிழமை பகல் விழாவாக ஐந்திருமேனிகள் விழா, இரவு இறைவன் இரவலர் கோல விழா, பங்குனி 4 மார்ச்  18 வெள்ளிக் கிழமை பகல் விழாவாக திருக்கூத்த பெருமான் திருக்காட்சி ஐந்திருமேனிகள் விழா, இரவு திருக்கல்யாணம், பங்குனி 5 மார்ச்  19 சனிக் கிழமை பகல் விழாவாக உமா மகேஸ்வரர் தரிசனம், இரவு பந்தம் பறி விழா, பங்குனி 6 மார்ச்  20 ஞாயிற்றுக்  கிழமை பகல் விழாவாக விழா நிறைவுத் திருமுழுக்கு, இரவு விடையாற்றி தொடக்கத்துடன் விழா நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !