உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நவக்கிரஹ கோவில்களில் பிரணாப் மகள் வழிபாடு

நவக்கிரஹ கோவில்களில் பிரணாப் மகள் வழிபாடு

ஜனாதிபதி வேட்பாளர் மகள் ஷர்பிதா, கும்பகோணம் நவக்கிரஹ கோவில்களில், நேற்று வழிபாடு நடத்திச் சென்றுள்ளார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில், ஜனாதிபதி வேட்பாளராக பிரணாப் முகர்ஜி போட்டியிடுகிறார். திருச்சியிலிருந்து, புதுக்கோட்டைக்கு நேற்று காலை, கார் மூலம் சென்ற பிரணாப் முகர்ஜியின் மகள் ஷர்பிதாவுக்கு, புதுக்கோட்டை போலீசார் பாதுகாப்பு அளித்து, அழைத்து சென்றனர். தொடர்ந்து, பிள்ளையார்பட்டி விநாயகர் கோவில், தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலுக்குச் சென்று, ஷர்பிதா வழிபாடு செய்தார். கும்பகோணத்திலுள்ள நவக்கிரஹ கோவில்களுக்கும், அவர் சென்று வழிபட்டார். இப்பயணம் குறித்து, புதுக்கோட்டை போலீசார் ரகசியமாக வைத்திருந்தனர். தஞ்சை எஸ்.பி., அலுவலகத்துக்கும், தகவல் தெரிவிக்கப்படவில்லை. இதுகுறித்து, தஞ்சை எஸ்.பி., அலுவலக அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், "ஜனாதிபதி வேட்பாளர் பிரணாப் மகள் வருகை, ரகசியமாக வைக்கப்பட்டு இருந்தது. பொதுமக்கள், பத்திரிகையாளர்கள் தொந்தரவு இல்லாமல், சுவாமி தரிசனம் செய்ய வசதியாக, அவரது வருகை மிக மிக ரகசியமாக வைக்கப்பட்டு இருந்தது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !