உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பறவைக் காவடி, தீச்சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

பறவைக் காவடி, தீச்சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

காரைக்குடி: காரைக்குடியில், விடுமுறை நாளான நேற்று ஒரே நாளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம், பறவைக் காவடி, தீச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் திருவிழா பிரசித்தி பெற்ற ஒன்றாகும். இங்கு நடைபெறும் முக்கிய திருவிழாவான பால்குட திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவர். விடுமுறை நாளான நேற்று ஒரே நாளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம், பறவைக் காவடி, தீச்சட்டி எடுத்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். முத்தாலம்மன் கோயில் அம்மன் சன்னதி ஸ்ட்ரீட் முத்தூர் அணை வழியாக முத்து மாரியம்மன் கோவில் வரை பக்தர்கள் நடந்து வந்தனர். வழிநெடுகிலும் பக்தர்களுக்கு பொதுமக்கள் மற்றும் கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களின் கறைகளைப் போக்க தண்ணீர் ஊற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !