சென்னை ஓம் ஸ்ரீ கந்தாஸ்ரமத்தில் கும்பாபிஷேகம் கோலாகலம்
ADDED :1393 days ago
சென்னை : சென்னை ஓம் ஸ்ரீ கந்தாஸ்ரமத்தில் மஹா கும்பாபிஷேகம் காலை வெகு சிறப்பாக நடந்தது.
தாம்பரம் அடுத்த சேலையூரில் உள்ள சென்னை ஓம் ஸ்ரீ கந்தாஸ்ரமத்தில் மஹா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, இன்று (14ம் தேதி) அதிகாலை 5.00 மணிமுதல் 4ம் காலபூஜை துவங்கியது. தொடர்ந்து ஸங்கல்பம், தீபாராதனை, கலசபுறப்பாடு நடைபெற்றது. காலை 9.25 மணி முலை் 10.20 மணிக்கு ஸகல தேவதா மூர்த்திகளுக்கு மஹா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடந்தது.
கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது.