சிவகாசி பேச்சியம்மன் கோயிலில் முளைப்பாரி ஊர்வலம்
ADDED :1314 days ago
சிவகாசி: சிவகாசி பேச்சியம்மன் கோயில் மாசி பிரம்மோற்சவ திருவிழா மார்ச் 4 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. பத்து நாட்கள் தொடர்ந்து நடந்த திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் சுவாமிக்கு ஒவ்வொரு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடந்தது. தொடர்ந்து தலைக்கட்டு பொங்கல் , அம்மனுக்கு சர்வமங்கள அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. அம்மன் வீதி உலா, மற்றும் பக்தர்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலம் சென்றனர்.