குல தெய்வ கோவிலில் தெலுங்கானா ஆளுநர் தரிசனம்
ADDED :1313 days ago
அனுப்பர்பாளையம்: தெலுங்கானா மாநில கவர்னராக தமிழகத்தை சேர்ந்த தமிழிசை சவுந்தர்ராஜன் உள்ளார். இவரது குலதெய்வமான ஸ்ரீ மகா பெரிய சாமி கோவில், திருப்பூர் மாவட்டம், திருப்பூர் அடுத்த வள்ளிபுரம் ஊராட்சி, தட்டான் குட்டை வனங்கா முடியனூரில் உள்ளது. கோவையில் நேற்று பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் மதியம் கணவர் சவுந்தர்ராஜனுடன், குல தெய்வ கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார். அப்போது, அவர் ஐம்பொன்னால் ஆன இரண்டு கிரிடம் மற்றும் ஆபரண மாலைகளை கோவிலுக்கு வழங்கினார். இதனையொட்டி, கோவிலில் சிறப்பு அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக அவரை பா.ஜ மாநில, மாவட்ட நிர்வாகிகள் சால்வை அணிவந்து வரவேற்றனர். கவர்னர் வருகையையொட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.