உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுப்ரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேக விழா

சுப்ரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேக விழா

பரமக்குடி: பரமக்குடி அருகே பார்த்திபனூர் புலவர்வேலங்குடி கிராமத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது.

மார்ச் 9 அன்று காலை அனுக்கை, கணபதி ஹோமத்துடன் விழா துவங்கியது. மார்ச் 10 முதல் கால யாக பூஜைகள் பூர்ணாகுதி நடந்தது. தொடர்ந்து நேற்று காலை 7:00 மணிக்கு நான்காம் கால யாக பூஜைகள் பூர்ணா பத்தி நிறைவடைந்து கடம் புறப்பாடு ஆனது. பின்னர் 10:00 மணிக்கு மேல் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி விமான கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. ஏற்பாடுகளை மலேசியா வாழ் தமிழ் உறவுகளும், புலவர் வேலங்குடி பொதுமக்களும் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !