2 வருடங்களுக்கு பிறகு திருப்பதியில் தெப்ப திருவிழா கோலாகலம்
ADDED :1308 days ago
திருப்பதி: இரண்டு வருடங்களுக்கு பிறகு திருமலை திருப்பதியில் தெப்ப திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
திருமலை திருப்பதியில் நடைபெறும் விழாக்களில் தெப்ப திருவிழா முக்கியமானதாகும்.ஐந்து நாள் நடைபெறும் இந்த விழாவில் சுவாமி அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். கொரோனா காரணமாக இந்த விழா இரண்டு வருடங்களாக நிறுத்திவைக்கப்பட்டு இருந்தது. இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு ஞாயிற்றுக் கிழமையான நேற்று விமரிசையாக துவங்கியது. சீதா, லட்சுமண, ஆஞ்சநேய சமேத ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி சுவாமி தெப்பத்தில் அமர்ந்தபடி மூன்று சுற்றுகள் வலம் வந்து படிக்கட்டுகளில் அமர்ந்திருந்த பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.