அருணாசலேஸ்வரர் கோவிலில் பங்குனி பிரதோஷ பூஜை
ADDED :1592 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் பங்குனி மாத வளர்பிறை பிரதோஷ பூஜையை ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், பங்குனி மாத வளர்பிறை பிரதோஷத்தையொட்டி, கோவிலில் கொடிமரத்திலுள்ள அதிகார நந்தி, கிளி கோபுரம் எதிரிலுள்ள சிறிய நந்தி, ஆயிரங்கால் மண்டபம் அருகிலுள்ள பெரிய நந்தி ஆகியவற்றிற்கு பால், பன்னீர், சந்தனம், தேன், இளநீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. இதை ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். தொடர்ந்து, சுவாமி மூன்றாம் பிரகாரம் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்வு நடந்தது.