உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவை முத்துமாரியம்மன் கோவிலில் ஊஞ்சல் அலங்காரத்தில் அம்மன்

கோவை முத்துமாரியம்மன் கோவிலில் ஊஞ்சல் அலங்காரத்தில் அம்மன்

கோவை ; ஆடி மாதம் என்றாலே அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம் இந்த மாதத்தில் அம்மன் கோவில்களில் ஊஞ்சல் உற்சவம் மிகவும் விசேஷமாகும் ஆடி மாதம் செவ்வாய் கிழமை வெள்ளிகிழமை மற்றும் அமாவாசை நாட்களில் உற்சவர் அம்மன் விக்கிரகத்தை ஊஞ்சலில் வைத்து அலங்காரம் செய்து மாலையில் பக்தர்களுக்கு காட்சியளிக்கும் நிகழ்வு அனைத்து அம்மன் கோயில்களிலும் நடைபெறும் இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு ஊஞ்சலில் காட்சியளிக்கும் அம்மனை நினைத்து வழிபாடு செய்து பக்தி பாடல்கள் பாடி வணங்குவது வழக்கமான ஒன்றாகும் இதையொட்டி ஆடி மாதம் இரண்டாவது வெள்ளிகிழமை  கோவை ராம் நகர் வி என் தோட்டம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் உற்சவர் அம்மன் ஊஞ்சலில் வைத்து வணங்கும் நிகழ்ச்சி நடந்தது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் நிறைவாக பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !