ராஜராஜேஸ்வரி அம்மன் கோவில் ஆடி திருவிழா
ADDED :4871 days ago
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி லட்சுமணராவ் தெரு ஞான ராஜராஜேஸ்வரி கோவிலில், ஆடி திருவிழா நேற்று துவங்கியது. வரும் 26ம் தேதி வரை விழா நடக்கிறது. ஆடி விழாவின் முதல் நாளான, நேற்று (ஜூலை 16) காலை 6 மணிக்கு, சிறப்பு சண்டி ஹோமம் நடந்தது. அம்மனுக்கு கவசம் சாத்தி சிறப்பு அலங்காரம் நடந்தது. மதியம் 2 மணிக்கு அம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதையொட்டி, தினம் அம்மனுக்கு மாறுபட்ட அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் நடக்கிறது. மேலும், குத்துவிளக்கு பூஜை, நாகதேவதைகளுக்கு சிறப்பு பூஜை, அன்னதானம் ஆகியவையும் நடக்கிறது. ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.