உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரையார் சொரிமுத்து அய்யனார் கோயிலில் நாளை ஆடி அமாவாசை!

காரையார் சொரிமுத்து அய்யனார் கோயிலில் நாளை ஆடி அமாவாசை!

விக்கிரமசிங்கபுரம் : காரையார் சொரிமுத்து அய்யனார் கோயிலில் ஆடிஅமாவாசை திருவிழா நாளை (18ம் தேதி) நடக்கிறது. நெல்லை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற காரையார் சொரிமுத்து அய்யனார் கோயிலின் ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு கடந்த 8ம் தேதி கோயில் வளாகத்தில் கால்நாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. இதனை தொடர்ந்து தினந்தோறும் கோயிலில் மகாலிங்கசுவாமி, சொரிமுத்து அய்யனார் போன்ற தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடந்து வருகின்றன. ஆடி, அமாவாசை நாளான நாளை (18ம் தேதி) காலையில் பக்தர்கள் பொங்கலிடுதல் நிகழ்ச்சியும், மாலை சுமார் 6 மணிக்கு சங்கிலிபூதத்தார் கோயில் முன் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. பக்தர்களின் வசதிக்காக மாவட்டத்தின் பல்வேறு ஊர்களிலிருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் தங்கள் குடும்பத்தினருடன் கோயிலுக்கு வரத்துவங்கிவிட்டனர். இதனால் கோயில் வளாகத்தில் பக்தர்களின் கூட்டம் அதிகமாகி கொண்டிருக்கிறது. வனப்பகுதிகளில் தீ பிடிக்காமல் இருப்பதற்காக வனப்பகுதியை பாதுகாக்கும் பொருட்டு அதிக எண்ணிக்கையில் வனத்துறையினர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். பக்தர்களின் வசதிக்காக காரையார் ஆற்றில் அதிகளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. மொத்தத்தில் சொரிமுத்து அய்யனார் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா களைகட்ட துவங்கிவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !