உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காட்டு மாரியம்மன் கோவிலில் பொங்கல் பூச்சாட்டு விழா

காட்டு மாரியம்மன் கோவிலில் பொங்கல் பூச்சாட்டு விழா

அவிநாசி: அவிநாசி, ராயம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ காட்டுமாரியம்மன் கோவிலில், பொங்கல் பூச்சாட்டு விழா, கடந்த, 8ம் தேதி துவங்கியது. தினமும் பல்வேறு பூஜைகள், வழிபாடுகள் நடத்தப்பட்டன. இன்று அதிகாலை, 4:00 மணிக்கு, அம்மன் அழைத்தலும், தொடர்ந்து, விளக்கு மாவு பூவோடு எடுத்தலும் நடந்தது. காலை, 10:00 மணிக்கு, மகா அபிஷேக பூஜைகள், மதியம், 4:00 மணிக்கு தீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடந்தது. மாலை, 6:00 மணிக்கு கரகம் எடுக்கும் உற்வசம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். நாளை காலை, 10:00 மணிக்கு, மஞ்சள் நீர் விழா, மதியம், தீபாராதனையுடன் விழா நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !