குன்றக்குடியில் பங்குனி உத்திர விழா தேரோட்டம்
காரைக்குடி: குன்றக்குடி சண்முகநாதன் பெருமான் கோயில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது.
குன்றக்குடி பங்குனி உத்திர திருவிழா கடந்த மார்ச் 9 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து சுவாமி வெள்ளிக்கேடகத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சிகள் நடந்தது. மார்ச் 16 ஆம் தேதி வையாபுரி தெப்பம் மற்றும் வெள்ளி ரதமும் நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டத்தையொட்டி சுவாமி இன்று காலையில் தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. மாலை 4.30 மணிக்கு தேரோட்டம் நடந்தது. இதில், சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். இன்று மதியம் தீர்த்தவாரி உற்சவமும், மயிலாடும்பாறையில் சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் அடிகளார் தலைமையில் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.