ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நாளை தாயார் சேர்த்தி சேவை
ADDED :1296 days ago
ஸ்ரீரங்கம் : ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நாளை (18 ம் தேதி) ஸ்ரீநம்பெருமாள் - ஸ்ரீரங்கநாயகி தாயார் சேர்த்தி சேவை நடைபெற உள்ளது. தாயார் பிறந்த நாளான பங்குனி உத்திர நட்தசத்திரத்தின்று மட்டும் தான் ஸ்ரீநம்பெருமாளுடன் சேர்த்தி மண்டபத்தில் சேர்ந்து காட்சி தருவார். வருடத்தில் ஒரு முறை தான் தாயார் - நம்பெருமாள் சேர்த்தி சேவை நடைபெறும்.
ஆண்டுக்கு ஒரே முறை தான் நம்பெருமாள்- தாயார் ஒரு சேர காட்சியளிப்பாளர்கள் என்பதால், இதனை தரிசிக்கும் தம்பதிகளின் வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும் என்பது ஐதீகம்.