உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கோஷ்டியூர் பங்குனி உற்ஸவம் நிறைவு

திருக்கோஷ்டியூர் பங்குனி உற்ஸவம் நிறைவு

திருக்கோஷ்டியூர்: திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் பங்குனி உத்திர உற்ஸவம் நிறைவடைந்தது.சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் பங்குனி உத்திர மகோற்ஸவம் ஐந்து நாட்கள் நடைபெறும். மார்ச்14ல் யாகசாலை பூஜைகள் நடந்தது. தொடர்ந்து பெருமாள் தாயார் சன்னதியில் எழுந்தருளினார்.பின்னர் தாயாருக்கும், பெருமாளுக்கும் காப்புக்கட்டி உற்ஸவம் துவங்கியது.

தொடர்ந்து முத்துகொண்டை வைத்த வெற்றி வேல் மாலை சாற்றிய அலங்காரத்தில் சுவாமியும், தாயாரும் அருள்பாலித்தனர். தினசரி திருமாமகள் தாயார் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று காலை 10:00 மணிக்கு பெருமாள் தாயார் சன்னதியில் எழுந்தருளினார். மாலை 4:00 மணிக்கு உற்ஸவ பெருமாள் மூலவர் மற்றும் உற்ஸவ தாயாருக்கும் நவகலச அலங்காரத் திருமஞ்சனம் நடந்தது. பின்னர் தங்கப்பல்லக்கில் பு றப்பாடாகி சிமம மண்டபத்தில் எழுந்தருளினர்.பின்னர் தாயாரும்,பெருமாளும் பச்சை ஓலையில் ஊஞ்சல் விசேஷம் நடந்தது. தொடர்ந்து விசசே சாத்துமுறை, விநியோகம் கோஷ்டி நடந்து உற்ஸவம் நிறைவடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !