உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொம்பாக்கம் கோவிலில் செடல் உற்சவம்

கொம்பாக்கம் கோவிலில் செடல் உற்சவம்

புதுச்சேரி: கொம்பாக்கம் செங்கழுநீரம்மன் கோவில் 70ம் ஆண்டு செடல் மகோற்சவ விழா வரும் 20ம் தேதி நடக்கிறது.கொம்பாக்கம் செங்கழுநீரம்மன் கோவில் 70ம் ஆண்டு செடல் மகோற்சவ விழா, கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அதனைத் தொடர்ந்து தினமும், சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. நேற்று மகிஷாசூரசம்ஹார வீதியுலாநடந்தது. இன்று (18ம் தேதி) ராதா ருக்மணி கிருஷ்ணன் வீதியுலா, நாளை 19ம் தேதி சாரதி அலங்கார வீதியுலா நடக்கிறது. 20ம் தேதி மாலை 4 மணிக்கு செடல் உற்சவமும், திருத்தேர் உற்சவமும் நடக்கிறது.விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுவினர், விழாக் குழுவினர், பொதுமக்கள், இளைஞர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !