உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அன்னூர் ஐயப்பன் கோவில் விழா

அன்னூர் ஐயப்பன் கோவில் விழா

அன்னூர்: அன்னூர் ஐயப்பன் கோவிலில், உத்திர நட்சத்திரத்தை முன்னிட்டு விழா நடந்தது. அன்னூர் ஐயப்பன் கோவிலில், உத்திர நட்சத்திரத்தை முன்னிட்டு, நேற்று முன்தினம் இரவு ஐயப்பனுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. பால், தேன், தயிர், பன்னீர், நெய் உள்ளிட்ட 12 வகை திரவியங்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டன. இதையடுத்து அலங்கார பூஜை நடந்தது. ஐயப்பன் உள்பிரகாரத்தில் உலா வந்து அருள் பாலித்தார். அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !