தங்க ரிஷப வாகனத்தில் அண்ணாமலையார் உலா
ADDED :1634 days ago
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர விழா சிறப்பாக நடைபெற்றது. உத்திரத்தை முன்னிட்டு, நேற்று இரவு உண்ணாமுலையம்மன் சமேதரராய் அண்ணாமலையார் திருக்கல்யாணம் முடிந்து சிறப்பு அலங்காரத்தில் தங்க ரிஷப வாகனத்தில் எழுந்தருளி மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.