சங்கராபுரம் சந்தியாகப்பர் ஆலய விழா துவங்கியது
ADDED :4871 days ago
சாத்தூர் : உப்பத்தூர் சங்கராபுரம் சந்தியாகப்பர் ஆலய விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இதை முன்னிட்டு புனிதமிக்கேல் அதிதூதர் திருஉருவம் தாங்கிய சப்பரம் சங்கராபுரம், புதுக்கிராமம் பகுதியில் பவனி வந்தது.இரவு 8மணிக்கு பாதிரியார் ஞானபிரகாசம் ஜெபம் செய்தார். சாத்தூர் பாதிரியார் பிரிட்டோ சுரேஷ் கொடியேற்றினார். சங்கராபுரம்,உப்பத்தூர்,புதுக்கிராமம்பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். 24ம் தேதி யாகோபு விழா, தொடர்ந்து மிக்கேல் அதிதூதர், சந்தியாகப்பர், வேளாங்கன்னி திருஉருவ சிலையுடன் சப்பரம் பவனி நடக்கிறது. இதில் சாத்தூர் மற்றும் சுற்றுக்கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொள்வார்கள். 25ம் தேதி காலை மீண்டும் தொடங்கும் சப்பர பவனி மாலை 4 மணிக்கு ஆலயத்தை வந்தடைகிறது. ஏற்பாடுகளை பாதிரியார் பிரிட்டோ சுரேஷ்,ஊர் மக்கள் செய்துள்ளனர்.