ஸ்ரீவி., ஆண்டாள் கோயில் ஆடி விழா
ADDED :4930 days ago
ஸ்ரீவில்லிபுத்தூர்,: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடி விழாயொட்டி வெளி மாநில பக்தர்கள் அதிகளவில் வந்துள்ளனர். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடி விழா கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்ட ம் 23ம் தேதி நடக்கிறது. இதையொட்டி, ஆந்திரா, கர்நாடகா, தமிழகத்தின் பிற மாவட்டங்களான திருநெல்வேலி, திருச்சி உட்பட பல பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். இதனால் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பெரும்பாலான திருமண மண்டபங்கள், மண்டகபடி மண்டபங்கள், லாட்ஜ்களில் ஏராளமான பக்தர்கள் தங்கி, நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளனர்.