சின்னகரம் கோவிலில் பூபல்லக்கு விழா
ADDED :4872 days ago
செஞ்சி:சின்னகரம் பொன்னியம்மன், மாரியம்மன் கோவிலில் பூ பல்லக்கு விழா நடந்தது.செஞ்சி தாலுகா சின்னகரம் கிராமத்தில் லாரி டிரைவர்கள், உதவியாளர்கள் சார்பில் ஆடி முதல் நாளையொட்டி பூ பல்லக்கு விழா நடந்தது. இதை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை மாரியம்மன், பொன்னியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து பூஜைகள் செய்தனர். மதியம் அன்னதானம் நடந்தது இரவு 9 மணிக்கு பூபல்லக்கில் மாரியம்மன், பொன்னியம்மன் சாமி வீதியுலா நடந்தது.