சின்னசேலம் நந்தீஸ்வரருக்கு பிரதோஷ அபிஷேகங்கள்
ADDED :4872 days ago
சின்னசேலம்:சின்னசேலம் சிவன் கோவிலில் பிரதோஷத்தையொட்டி நந்தீஸ்வரருக்கு 16 வகை அபிஷேகங்கள் நடந்தது.சிவன் கோவிலில், கங்காதீஸ்வரருக்கு ராஜ அலங் காரம் செய்தும், நந்தீஸ்வரருக்கு 16 வகை அபிஷேகங் கள் நடந்தது. தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது.உற்சவருக்கும் இதே போல் அலங்காரம் நடந்தது. விழா ஏற்பாடுகளை வெங்கடேசன் குருக்கள் செய்தார். இதே போல் தென்பொன்பரப்பியில் உள்ள சுவர்ணபுரீஸ்வரருக்கும், கூகையூர் பெரியநாயகி உடனான சுவர்ணபுரீஸ்வரருக்கும், அசலகுசலாம்பிகை உடனான பஞ்சாச்சலநாதருக்கும் பிரதோஷ விழா நடந்தது.இந்தாண்டில் வரும் முதல் ஆடி சோமவாரம் என் பதாலும், தேய்பிறையில் வருவதாலும் இந்த பிரதோஷத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.