மேட்டூரில் ஜூலை 21ல் ஸ்ரீனிவாச திருக்கல்யாணம்
மேட்டூர்: திருமலை திருப்பதி தேவஸ்தானம் தாஸ ஸாஹித்ய ப்ராஜெக்ட், மேட்டூர் ஸ்ரீநரஹரி தீர்த்தர் பஜனா மண்டலி, நாமகிரி பஜனா மண்டலி சார்பில், வரும் 21ல் மேட்டூர் வைத்தீஸ்வரா பள்ளி வளாகத்தில், ஸ்ரீனிவாச திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. விழாவையொட்டி, 20ம் தேதி, காலை 9 மணிக்கு மங்கள இசை, காலை 10 மணிக்கு தாஸ ஸாஹித்ய பஜனா மண்டலியின் ஸமோஹிக பஜனா, மதியம் 1 மணிக்கு தீர்த்த பிரசாதம் வழங்குதல், மதியம் 2 மணிக்கு நடன நிகழ்ச்சி, மாலை 3 மணிக்கு பஜனை, மாலை 5 மணிக்கு சிறப்பு இன்னிசை கச்சேரி, இரவு 8.30 மணிக்கு மங்கள ஆரத்தி நடக்கிறது. மறுநாள் 21ம் தேதி, காலை 6 மணிக்கு, மங்கள இசை, காலை 7 மணிக்கு வேத கோஷங்கள் முழங்க, கோலாட்டம், பஜனையுடன் மேட்டூர் ராமன்நகர் கெம்பிளாஸ்ட் ப்ளான்ட்-2 மனமகிழ் மன்றத்தில் இருந்து ஊர்வலமாக, ஸ்வாமியை வைத்தீஸ்வரா மேல்நிலைபள்ளி வளாகத்தில் உள்ள திருமண மண்டபத்துக்கு அழைத்து வரும் நிகழ்ச்சி நடக்கிறது.காலை 11 மணிக்கு வேத விற்பன்னர்கள் உபன்யாசம், மதியம் 1 மணிக்கு தீர்த்த பிரசாதம், மதியம் 2 மணிக்கு ஸமோஹிக பஜனை, மாலை 5 மணிக்கு ஸ்ரீனிவாஸ திருக்கல்யாண வைபவம் விமர்சையாக நடக்கிறது.ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்கின்றனர்.