உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கள்ளழகர் கோலத்தில் வைகையில் இறங்கிய முத்தாலம்மன்

கள்ளழகர் கோலத்தில் வைகையில் இறங்கிய முத்தாலம்மன்

பரமக்குடி: பரமக்குடி முத்தாலம்மன் கோயில் பங்குனி விழாவில், அம்மன் கள்ளழகர் கோலத்தில் வைகையில் எழுந்தருளினார்.

இக்கோயிலில் நேற்று இரவு மின் தீப தேரில் அம்மன் நான்கு மாடவீதிகளில் வலம் வந்தார். இன்று அதிகாலை 5:00 மணிக்கு அம்மன் கள்ளர் திருக்கோலத்தில் அலங்காரமாகி பூப்பல்லக்கில் வைகை ஆற்றில் எழுந்தருளினார். தொடர்ந்து இரவு கொடி இறக்கத்துடன் நிறைவு விழா நிறைவடைகிறது. நாளை உற்சவ சாந்தியையொட்டி, காலை பக்தர்கள் பால்குடம் எடுத்து பாலாபிஷேகம் நடக்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !