பழநி முருகன் கோயிலுக்கு பறவை காவடி
ADDED :1631 days ago
பழநி: பழநி முருகன் கோயிலுக்கு சேலம் மாவட்டம் அரிசிபாளையத்தை சேர்ந்த பக்தர்கள் பறவைக்காவடி எடுத்து வந்தனர்.
பழநி முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பாதயாத்திரையாக காவடி எடுத்து வருகை தருகின்றனர். இந்நிலையில் நேற்று சேலம் மாவட்டம் அரிசிபாளையத்தைச் சேர்ந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்தனர். அவர்கள் பழநி அடிவாரம் கிரி வீதியில் அலகு குத்தி பறவைக்காவடி எடுத்து வலம் வந்தனர். அதன்பின் நேர்த்திக்கடன் நிறைவு செய்து மலைக்கோயில் சென்று சுவாமி தரிசனம் செய்து திரும்பினர்.