உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஒரு வாரம் ஆந்திராவில் யாத்திரை

விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஒரு வாரம் ஆந்திராவில் யாத்திரை

 காஞ்சிபுரம் : காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், ஒரு வார பயணமாக ஆந்திரா சென்றுள்ளார்.

காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், கடந்த 16ம் தேதி இரவு காஞ்சிபுரம் மடத்தில் இருந்து பொன்பாடி ஊருக்கு புறப்பட்டு சென்றார். அன்று இரவு, அங்கு தங்கி பூஜை செய்தார். 17ம் தேதி அங்கு பக்தர்களுக்கு தரிசனம் அளித்தார்.மாலையில் பவுர்ணமி பூஜை நடந்தது. 18ம் தேதி பவுர்ணமி ஸ்நானம் செய்யப்பட்டது. 19ம் தேதி, அமெரிக்காவைச் சேர்ந்த காமாட்சி ஸ்ரீவித்யா சமிதி நடத்திய, மூக பஞ்சஷதி ஸ்லோகம் நிகழ்ச்சி தொடக்கத்தில், காணொலி காட்சியில் உரையாற்றினார்.

பின், பக்தர்களுக்கு தரிசனம் அளித்த பின், திருமகள் திரிகால பூஜை செய்தார். அன்று மாலை பொன்பாடியில் இருந்து, ஆந்திர மாநிலம், கடப்பாவிற்கு புறப்பட்டு சென்றார்.இரவு 11:00 மணிக்கு கடப்பாவில் உள்ள அஹோபிலம் மடத்தை சென்றடைந்தார். 20ம் தேதி காலை, பக்தர்களுக்கு தரிசனம் அளித்த பின், திரிகால பூஜை செய்தார். மாலையில் கடப்பாவில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி கோவிலுக்கு சென்றார். மடத்தில் 21ம் தேதி காலை, திரி கால பூஜை செய்தார். பின் அஹோபிலம் மடத்தில் உள்ள நரசிம்மர் சன்னிதியில், சுவாதி நட்சத்திர சிறப்பு தீபாராதனை நடந்தது. அங்கு பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் வழங்கினார். கடப்பா மாவட்ட அர்ச்சக சமிதியில் உரையாற்றிய சுவாமிகள், அங்கிருந்து தாடிபத்திரிக்கு புறப்பட்டு சென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !