உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆடி அமாவாசை கோவில்களில் இன்று வழிபாடு

ஆடி அமாவாசை கோவில்களில் இன்று வழிபாடு

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோவில்களில், இன்று ஆடி அமாவாசையையொட்டி, சிறப்பு பூஜைகள் நடக்கிறது. ஆடி அமாவாசையன்று ஆற்றங்கரைகளில், முன்னோர்களை வழிபட்டு, திதி கொடுக்க ஏராளமான பக்தர்கள் குவிவர். காசிக்கு அடுத்ததாக, பவானி, கூடுதுறையில் திரிவேணி சங்கமிப்பதால், அங்கு ஏராளமான பக்தர்கள் குவிவர். இன்று காலை, பவானி சங்கமேஸ்வரர் கோவிலில், சிறப்பு அலங்காரம், பூஜை நடக்கிறது. ஆடி அமாவாசையை முன்னிட்டு, அதிகப்படியான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கவும், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !