திருவல்லிக்கேணி நரசிம்மர் பிரமோற்சவம்: தங்க சப்பரத்தில் சுவாமி உலா
ADDED :1364 days ago
சென்னை : சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் நரசிம்மர் பிரமோற்சவத்தில் தங்க சப்பரத்தில் வீதி உலா வந்து அருள்பாலித்தார்.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் பிரம்மோற்சவ விழா 20ம் தேதி தொடங்கியது. மார்ச் 1ம் தேதி வரை நடைபெறும் விழாவில், தினமும் காலை, மாலை வேளைகளில் சுவாமி பல்வேறு வாகனங்களில் திருவீதி புறப்பாடு நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு, இன்று தங்க சப்பரத்தில் உற்சவர் வீதி உலா வந்து அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.