உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஈரோடு மாரியம்மன் கோவில் விழா: அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்

ஈரோடு மாரியம்மன் கோவில் விழா: அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்

ஈரோடு: ஈரோடு பெரிய மாரியம்மன் கோவிலுக்கு, சாரை, சாரையாக பக்தர்கள் அலகு குத்தி வந்து, நேர்த்திக்கடன் செலுத்தினர்.

ஈரோடு பெரிய மாரியம்மன் வகையறா கோவிலில், குண்டம் மற்றும் தேர்த் திருவிழா நடந்து வருகிறது. இதில், காரை வாய்க்கால் மாரியம்மன் கோவிலில், நாளை காலை தீ மிதி விழா நடக்கிறது. அதன்பின், ஏப்., 2 வரை, தினமும் பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன் மற்றும் காரை வாய்க்கால் மாரியம்மன் கோவில்களில், பல்வேறு பூஜைகள் நடக்கின்றன. இந்நிலையில், நேற்று, காவிரி ஆற்றில் இருந்து பெரிய மாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள், முதுகில் அலகு குத்தி, பறவை காவடியாக கிரேனில் தொங்கியவாறு வந்தனர். பலர் வாயில் அலகு குத்தியும், மயில் காவடி எடுத்தும், சாரை சாரையாக வந்தனர். சில பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து வந்தனர். சிலர், அக்னி சட்டி ஏந்தி வந்தனர்.பக்தர்கள் வருகை அதிகரிப்பால், ஆங்காங்கே போக்குவரத்து மாற்றி விடப்பட்டது. காலை முதல் மாலை வரை, பக்தர்கள் வந்தபடியே இருந்தனர். ஏராளமான பக்தர்கள், கோவில் கம்பங்களுக்கு புனித நீர் ஊற்றி வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !