உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாதேஸ்வரன் கோவில் திருவிழா சிறப்பாக நடந்தது

மாதேஸ்வரன் கோவில் திருவிழா சிறப்பாக நடந்தது

கூடலூர்: கூடலூர் அருகே உள்ள மண்வயல் ஸ்ரீ மாதேஸ்வரன் கோவில் திருவிழா 24ம் தேதி மகா கணபதி ஹோமம் மற்றும் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து சிறப்பு பூஜைகளும்; இரவு 7:00 மணிக்கு கலை நிகழ்ச்சியும் நடந்தது. 25ம் தேதி காலை முதல் சிறப்பு பூஜையும்: காலை 11:30 கோழிக்கோட்டை சேர்ந்த சுவாமி ஜிதாதமானந்த சரஸ்வதி அவர்களின் ஆன்மீக சொற்பொழிவு நடந்தது. மாலை 6:00 மணிக்கு புத்தூர்வயல் ஸ்ரீமகாவிஷ்ணு கோவிலிலிருந்து தாலப்பொலி, அம்மன் குடம், செண்டைமேளம், புலி ஆட்டத்துடன் தேர் ஊர்வலம் துவங்கியது. ஊர்வலம் மண்வயல் வழியாக மாதேஸ்வரன் கோவிலை வந்தடைந்தது. நேற்று முன்தினம், சிறப்பு பூஜைகளுடன் விழா நிறைவு பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !