உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கமுதி முத்துமாரி அம்மன் கோயில் முளைப்பாரி ஊர்வலம்

கமுதி முத்துமாரி அம்மன் கோயில் முளைப்பாரி ஊர்வலம்

கமுதி: கமுதி முத்துமாரி அம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா முளைப்பாரி ஊர்வலடன் நிறைவு பெற்றது.

கமுதி முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் காப்புகட்டி விரதம் இருந்து வந்தனர்.தினந்தோறும் அம்மன் திருவீதி உலா நடந்தது.கடந்த மார்ச் 23ந் தேதி பக்தர்கள் சேத்தாண்டி வேடம், பால்குடம், அக்கினி சட்டி, பொங்கல் வைத்து நேர்த்துகடன் செலுத்தினர். இந்நிலையில் பங்குனி பொங்கல் விழா நிறைவு நாளில் அம்மனுக்கு அபிஷேகம்,சிறப்புபூஜை, நீராட்டு நடந்தது. கோயிலில் இருந்து பக்தர்கள் முளைப்பாரி தூக்கி பஜார் தெரு, பஸ்ஸ்டாண்ட்,எட்டுக்கண் பாலம் உட்பட முக்கிய வீதிகளில் ஊர்வலமாக​ சென்றனர். பின்பு குண்டாற்றில் முளைப்பாரி கரைத்தனர்.விழாவில் கமுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பக்தர்கள்,பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !