ரூ.1,280 கோடி புனரமைக்கப்பட்ட நரசிம்மர் கோவிலில் கும்பாபிஷேகம்
ஹைதராபாத் : தெலுங்கானாவில், 1,280 கோடி ரூபாயில் புனரமைக்கப்பட்ட லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலின் கும்பாபிஷேகம் நேற்று விமரிசையாக நடந்தது. இதில், முதல்வர் சந்திரசேகர ராவ் மற்றும் அனைத்து அமைச்சர்களும் பங்கேற்றனர்.
தெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள யாதாத்ரி புவனகிரி மாவட்டத்தில் அமைந்துள்ளது, லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில். இக்கோவில் வளாகம், 11 ஏக்கரில் இருந்து, 17 ஏக்கராக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. மேலும், பல புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இக்கோவில், 2.50 லட்சம் டன் கறுப்பு கிரானைட் கற்களால் அமைக்கப்பட்டுள்ளது. மொத்தம், 1,280 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்ட இக்கோவிலின் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதில், முதல்வர் சந்திரசேகர ராவ் மற்றும் அவரது அமைச்சர்கள் அனைவரும் பங்கேற்றனர்.